» சினிமா » செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸில் ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 5 விருதுகளை அள்ளியது‘அனோரா’!

செவ்வாய் 4, மார்ச் 2025 11:23:52 AM (IST)



லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘அனோரா’ திரைப்படம் 5 விருதுகளை வென்றது. 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில், 97-வது ஆஸ்கர் விருது விழா, இந்திய நேரப்படி நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச அளவில் திரைத்துறையின் உயர்ந்த விருது விழாவான இதில் உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து திரையுலகினர் இதில் பங்கேற்றனர்.

விழாவை, பிரபல நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார். இதில், ‘எமிலியா பரேஸ்’ என்ற பிரெஞ்சு மொழி படம், அதிகபட்சமாக 13 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத பிற மொழி படம் என்ற சாதனையை படைத்தது. இதில், பாலியல் தொழிலாளியின் காதலைப் பேசிய ‘அனோரா’ படம், 5 விருதுகளை வென்றது.

சிறந்த படம் (சீன் பேக்கர்), சிறந்த இயக்குநர் (சீன் பேக்கர்), சிறந்த ஒரிஜினல் திரைக்கதை (சீன் பேக்கர்), சிறந்த நடிகை (மைக்கி மேடிசன்), சிறந்த படத்தொகுப்பு (சீன் பேக்கர்) ஆகிய பிரிவுகளில் ‘அனோரா’ விருதுகளை வென்றது. ஒரே படத்துக்காக, 4 ஆஸ்கர் விருதுகளை ஒருவரே (சீன் பேக்கர்) வெல்வது இதுதான் முதல் முறை.

‘த புரூட்டலிஸ்ட்’ திரைப்படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகர் (அட்ரியன் ப்ரோடி), சிறந்த ஒரிஜினல் இசை (டேனியல் ப்ளூம்பெர்க்), சிறந்த ஒளிப்பதிவு (லால் கிராலே) ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளை வென்றது.

மற்ற விருது விவரம்
  • துணை நடிகர்: கீயரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)
  • துணை நடிகை: ஜோ சால்டானா (எமிலியா பரேஸ்)
  • தழுவல் திரைக்கதை: கான்க்ளேவ்
  • விஷுவல் எபெக்ட்ஸ்: டூன்: பார்ட் 2
  • சிறந்த ஒலி அமைப்பு: டூன்: பார்ட் 2
  • வெளிநாட்டுத் திரைப்படம்: ஐம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)
  • ஆவணப்படம்: நோ அதர் லேண்ட்
  • ஆவணக் குறும்படம்: தி ஒன்லி கேர்ள் இன் த ஆர்கேஸ்ட்ரா
  • அனிமேஷன் படம்: ஃப்ளோ
  • ஆடை வடிவமைப்பு: பால் டாஸ்வெல் (விக்கட்)
  • ஒப்பனை, சிகையலங்காரம்: தி சப்ஸ்டேன்ஸ்
பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரிப்பில் டெல்லியில் எடுக்கப்பட்ட ‘அனுஜா' என்ற குறும்படத்துக்கு விருது கிடைக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory