» சினிமா » செய்திகள்

தூத்துக்குடி மீனவ கிராமத்தின் கதை கிங்ஸ்டன் : ஜி.வி.பிரகாஷ்

செவ்வாய் 4, மார்ச் 2025 4:33:53 PM (IST)

 

"தூத்துக்குடியில் உள்ள மீனவ கிராமத்தின் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட படம் கிங்ஸ்டன்" என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.

கிங்ஸ்டன் படத்தின் கதாநாயகனும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கோவை புரோசோன் மாலில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது: "தூத்துக்குடியில் உள்ள மீனவ கிராமத்தின் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட படம். இந்திய சினிமாவில் பார்க்காத விஷயம் இந்த படத்தில் அமைந்துள்ளது. மார்ச் 7-ம் தேதி வெளியாக இருக்கும் கிங்ஸ்டன் திரைப்படம் ஒரு திகில் சாகச படம்.

இதுவரைக்கும் கடலுக்குள் யாரும் படம் எடுத்ததில்லை. கடலுக்கு அடியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் பிரம்மாண்டமாக இருக்கும். இந்திய சினிமாவில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும். ஒரு மீனவ கிராமத்தால் மீன் பிடிக்க உள்ளே போக முடியாது. அதன் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட கதையாக இந்தப் படம் உள்ளது.

ஹாலிவுட் திரைப்படத்தில் கடல் கொள்ளையர்கள் பற்றி எடுப்பார்கள், ஆனால் இந்த படம் தூத்துக்குடி பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி எடுத்துள்ளோம். இது காதல், காமெடி, பேய் படம் கிடையாது. இதில் எல்லாமே புதுமையாக இருக்கும். இந்தக் கதை நான்காம் பாகம் வரை உள்ளது. பெரிய கதையாக இருக்கிறது. இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களில் சார்ந்தவர்களை கொண்டு படத்தின் பெயர் அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory