» சினிமா » செய்திகள்

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்: நயன்தாரா வேண்டுகோள்!

புதன் 5, மார்ச் 2025 12:30:08 PM (IST)

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என இனி அழைக்க வேண்டாம் என ரசிகர்கள், மீடியாவுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டுள்ளதாவது, ''என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இந்துள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதற்கு அழகு சேர்த்துள்ளது. வெற்றியின் போது என் தோளில் சாய்ந்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் ரசிகர்களான நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள்.

நீங்கள் பலரும் என்னை லேடி சூப்பர்ஸ்டார்' என்று அன்புடன் அழைத்து வாழ்த்துகிறீர்கள். உங்கள் ஆதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை `நயன்தாரா' என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது; ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும் அது மட்டுமே குறிக்கிறது. பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால், சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்'' எனப் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory