» சினிமா » செய்திகள்

டிராகன் படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

புதன் 5, மார்ச் 2025 4:05:23 PM (IST)



டிராகன் திரைப்படத்தின் நடிகர், இயக்குநரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, டிராகன் படத்தால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இடத்திற்கு முன்னேறியுள்ளார். கல்லூரியில் ஒழுங்காகப் படிக்காத நாயகன் குறுக்கு வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை கேள்வி கேட்கும்படியான படமாக டிராகன் உருவாகியிருந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியுள்ளது.

சாதாரண கமர்சியல் படம் என்பதைத் தாண்டி, திரை எழுத்தாகவும் பலரின் உணர்வுகளைத் தொட்டதால் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டிற்கே அழைத்து அஸ்வத்தை பாராட்டியுள்ளார். மேலும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோரும் ரஜினியை சந்தித்துள்ளனர். 

இதுகுறித்து அஸ்வத், "அற்புதமா எழுதியிருக்கீங்கன்னு ரஜினி சார் பாராட்டினார். நல்ல படம் பண்ணனும், படத்தைப் பார்த்துட்டு ரஜினி சார் நம்மளை வீட்டுக்குக் கூப்பிட்டு பேசணும்.. இதெல்லாம் இயக்குநர் ஆகணும்னு உழைக்கிற பல உதவி இயக்குநர்களோட கனவு. கனவு நிறைவேறிய நாள் இன்று” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நேற்று (மார்ச் 4) இப்படத்தின் மாபெரும் வெற்றியை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இதன் வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory