» சினிமா » செய்திகள்

எனது தாயார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை : பாடகி கல்பனாவின் மகள் விளக்கம்

வியாழன் 6, மார்ச் 2025 11:17:07 AM (IST)



"எனது தாயார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. தயவுசெய்து தவறான தகவலைப் பரப்பி விஷயத்தை பெரிதுபடுத்தாதீர்கள்" என்று பிரபல பின்னணி பாடகி கல்பனாவின் மகள் தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகி கல்பனா தனது வீட்டில் மயங்கிய இருந்த நிலையில், ஹைதராபாத் போலீஸாரால் மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்பனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கும் அவரின் மூத்த மகளுக்கும் பிரச்சினை என்றும், கல்பனா தற்கொலைக்கு முயன்றார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக கல்பனாவின் தற்கொலை முயற்சித்தாக கூறப்படுவதை அவரது மகள் மறுத்துள்ளார். தனது தாயாரின் உடல்நிலை குறித்து இன்று (மார்ச் 5) செய்தியாளர்களிடம் பேசினார்.

கல்பனாவின் மகள் கூறுகையில், "எனது தாய்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் நலமாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளார். அவர் ஒரு பாடகி. மேலும் முனைவர் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் எல்எல்பி படித்துவருகிறார். இது தூக்கமின்மைக்கு வழிவகுத்தது. இதனால், மருத்துவரின் பரிந்துரையின் படி, அவர் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டுவந்தார். மன அழுத்தம் காரணமாக அவர் சாப்பிட்ட மாத்திரையின் அளவு அதிகமாகிவிட்டது. தயவு செய்து தவறான தகவல்களை உருவாக்க வேண்டாம்.

எனது பெற்றோர் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். எனது குடும்பத்தில் அனைவரும் நலமாக உள்ளோம். அம்மா விரைவில் குணமாகி திரும்பி வருவார். இது தற்கொலை முயற்சி அல்ல. அவர் எடுத்துக்கொண்டு தூக்க மாத்திரை ஓவர் டோஸ் ஆகிவிட்டது. எனவே, தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory