» சினிமா » செய்திகள்
முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே
புதன் 12, மார்ச் 2025 5:28:29 PM (IST)

சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்துக்காக பூஜா ஹெக்டே, முதல் முறையாக, தமிழில் டப்பிங் பேசியுள்ளார்.
தமிழில் ‘முகமூடி’ படம் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துப் பிரபலமானார். இப்போது தமிழில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்நிலையில் ‘ரெட்ரோ’ படத்துக்காக பூஜா ஹெக்டே, முதல் முறையாக, தமிழில் டப்பிங் பேசியுள்ளார். இதற்காக அவர் கடுமையான பயிற்சி மேற்கொண்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. மே 1-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
