» சினிமா » செய்திகள்

பின்வாங்கியது தனுஷின் இட்லி கடை : அக்.1‍ல் ரிலீஸ்!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:03:45 PM (IST)



ஏப்ரல் 10-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்ட தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படம் அக்.1-ம் தேதி வெளியாகும் என புதிய தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 10-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்ட படம் ‘இட்லி கடை’. ஆனால், அந்த தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது. இன்னும் வெளிநாட்டில் படப்பிடிப்பு இருப்பதுதான் தாமதத்துக்கு காரணம் என தயாரிப்பாளர் ஆகாஷ் பேட்டியொன்றில் குறிப்பிட்டார். தற்போது புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

அக்டோபர் 1-ம் தேதி ‘இட்லி கடை’ வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஜூன் 20-ம் தேதி ‘குபேரா’, அக்டோபர் 1-ம் தேதி ‘இட்லி கடை’ மற்றும் நவம்பர் 28-ம் தேதி ‘தேரே இஸ்க் மெயின்’ ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ளன.

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். டான் பிக்சர்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory