» சினிமா » செய்திகள்
பிராமண சமூகத்தைப் பற்றி அவதூறு கருத்து: மீண்டும் மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:31:22 PM (IST)
பிரமாணர் சமூகம் குறித்து மோசமாகப் பேசிய கருத்துக்களுக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

இது தொடர்பாக, "கோபத்தில், ஒருவருக்கு பதிலளிக்கும் போது என் வரம்புகளை மறந்துவிட்டேன். முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிவிட்டேன். என் வாழ்க்கையில் பல நண்பர்கள் அந்த சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது. இன்று அவர்கள் அனைவரும் என்னால் காயப்பட்டுள்ளார்கள். என் குடும்பம் என்னால் காயப்படுத்தப்படுகிறது. நான் மதிக்கும் பல அறிவுஜீவிகள், என் கோபத்தாலும் என் பேச்சு முறையாலும் காயப்படுகிறார்கள்.
இப்படிச் சொன்னதன் மூலம், நானே என் சொந்தக் கண்ணோட்டத்திலிருந்து விலகிவிட்டேன். இந்த சமூகத்திடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் யாரோ ஒருவரின் மலிவான கருத்துக்கு பதிலளிக்கும் போது கோபத்தில் அதை எழுதினேன். நான் பேசும் விதம் மற்றும் அவதூறான வார்த்தைகளுக்காக எனது நண்பர்கள், என் குடும்பத்தினர் மற்றும் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது இது மீண்டும் நடக்காமல் இருக்க, என் கோபத்தை நான் சரி செய்வேன். இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேச வேண்டியிருந்தால், சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தானம் படத்திலிருந்து கோவிந்தா பாடல் நீக்கம்!
வியாழன் 15, மே 2025 3:49:49 PM (IST)

லோகேஷ் கனகராஜ் - ராகவா லாரன்ஸ் இணையும் பென்ஸ் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
செவ்வாய் 13, மே 2025 4:09:00 PM (IST)

ரஜினி - கமல் இணைந்து நடிக்க முயற்சி எடுத்தேன் : இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
திங்கள் 12, மே 2025 12:40:29 PM (IST)

போர் பதற்றம் எதிரொலி : தக் லைஃப்: இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 4:28:30 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)
