» சினிமா » செய்திகள்
எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம் : சந்தானம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:39:59 PM (IST)

எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம் என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.
நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தற்காலிகமாக இந்தப் படத்துக்கு ’எஸ்டிஆர்49’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தினை இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் இந்தாண்டே திரையரங்குகளில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது, நாயகனாக நடித்து வரும் சந்தானம் சிம்பு படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் சந்தானம் கூறியதாவது:ஒருநாள் சிம்புவிடமிருந்து அழைப்பு வந்தது. என் படத்தில் நடிக்கிறாயா? எனக் கேட்டார். அவர் கேட்டால் எப்போதும் ஆமாம் என்றுதான் சொல்லுவேன். எனது படத்தில் பிஸியாக இருந்தாலும் சிம்பு கேட்டதால் உடனே சரி என்றேன். எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தானம் படத்திலிருந்து கோவிந்தா பாடல் நீக்கம்!
வியாழன் 15, மே 2025 3:49:49 PM (IST)

லோகேஷ் கனகராஜ் - ராகவா லாரன்ஸ் இணையும் பென்ஸ் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
செவ்வாய் 13, மே 2025 4:09:00 PM (IST)

ரஜினி - கமல் இணைந்து நடிக்க முயற்சி எடுத்தேன் : இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
திங்கள் 12, மே 2025 12:40:29 PM (IST)

போர் பதற்றம் எதிரொலி : தக் லைஃப்: இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 4:28:30 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)
