» சினிமா » செய்திகள்
நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்? பெரிய பாய் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அதிருப்தி!
செவ்வாய் 20, மே 2025 11:26:07 AM (IST)
நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்? பெரிய பாய் என்ற புனைப்பெயர் பிடிக்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக இளம் ரசிகர்கள் இவரை ’பெரிய பாய்’ என்ற புனைப்பெயர் கொண்டும் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடல், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விளம்பரப் பணிகளில் ஒரு பகுதியாக ஏ.ஆர். ரஹ்மான் நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.
அந்த நேர்க்காணலில் ஏ.ஆர். ரஹ்மானை பெரிய பாய் என்ற புனைப்பெயருடன் தொகுப்பாளர் அழைத்தார். இதனைக் கேட்டு சிரித்த ரஹ்மான், பெரிய பாய், சின்ன பாய் என்று அழைப்பதற்கு, நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்? இந்த பெயர் பிடிக்கவில்லை” என்று நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இந்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
வியாழன் 17, ஜூலை 2025 4:30:39 PM (IST)

படம் ரிலீசான முதல் 3 நாட்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க தடை: நடிகர் விஷால் வலியுறுத்தல்
வியாழன் 17, ஜூலை 2025 12:16:41 PM (IST)

படப்பிடிப்பு விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழப்பு: சரத்குமார் இரங்கல்!
புதன் 16, ஜூலை 2025 12:11:43 PM (IST)

ரஜினியின் கூலி ட்ரெய்லர் ஆக.2-ல் வெளியாகும் : லோகேஷ் கனகராஜ் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:33:58 PM (IST)

சூப்பர் குட் பிலிம்ஸ் - விஷால் படம்: பூஜையுடன் தொடக்கம்
திங்கள் 14, ஜூலை 2025 5:26:22 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
திங்கள் 14, ஜூலை 2025 11:17:58 AM (IST)
