» சினிமா » செய்திகள்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

வியாழன் 17, ஜூலை 2025 4:30:39 PM (IST)

திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். மேலும், இயக்குநர் மற்றும் நடிகர் என பல பரிமானங்களைக் கொண்டவர். 1989-ல் 'நாளைய மனிதன்' படத்தில் இயக்குநராக அறிமுகமாகி 'அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன்' என பல படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வேலு பிரபாகரன் இன்று (ஜூலை 17) பிற்பகல் 12.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டர். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory