» சினிமா » செய்திகள்

சேது படம் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது: கிச்சா சுதீப் நெகிழ்ச்சி!

புதன் 6, ஆகஸ்ட் 2025 10:54:57 AM (IST)



சேது” படம் தமிழில் எப்படி விக்ரம் சாருக்கு சீயான் பெயரை வாங்கி கொடுத்ததோ அதோ மாதிரி கன்னடத்தில் எனக்கு கிச்சா சுதீப்னு பெயர் வாங்கி கொடுத்தது என்று கிச்சா சுதீப் தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் சுதீப் "நான் 12வது படிக்கும் போதே சினிமாவில் நடிக்கனும் என்ற ஆசை வந்திடுச்சு. படம் பார்க்க ரொம்ப பிடிக்கும். சினிமா இல்லாட்டி கிரிக்கெட் பிளேயரா வரணும் ஆசை. ஆனால், எங்க அப்பா ரொம்ப கண்டிப்பா இருந்தாரு. இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்த்துவிட்டார். அப்பாகிட்ட சினிமாவில் நடிக்கனும் சொல்றேன். நான் நடிச்ச முதல் 3 படங்கல்ளும் பிளாப். நடிப்பு சரியா வரலைன்னு சீரியல் பக்கம் போனேன். 

அங்கே போனா துணை நடிகர் கதாப்பாத்திரம். சரி நடிப்பு நமக்கு வரலை இதையாவது நல்லா பண்ணனும் நடிக்க தொடங்கிட்டேன். அந்த டைம்ல தான் தமிழில் ஒரு படம் பயங்கரமா தியேட்டரில் ஓடிட்டு இருக்கு. ஆனால், அந்த படம் பயங்கர சிக்கலில் தியேட்டரில் 2 முறை வெளியாகி அதுக்கப்புறம் பிக் அப் ஆகுது. நான் அந்த படத்தை பார்த்ததும், இந்த படத்தை கன்னட ரீமேக்ல நான் நடிக்க கூடாதுன்னு நினைத்தேன். அந்த படம் தான் விக்ரம் சார் நடிச்ச சேது. தமிழில் எப்படி விக்ரம் சாருக்கு சீயான் பெயரை வாங்கி கொடுத்ததோ அதோ மாதிரி கன்னடத்தில் எனக்கு கிச்சா சுதீப்னு பெயர் வாங்கி கொடுத்தது.

சினிமாவில் 'ரீ என்ட்ரி'...பூஜையுடன் துவங்கிய அப்பாஸின் புதிய படம்
இப்பவரைக்கும் கிச்சா என்ற பெயர் எனக்கு மறக்க முடியாத வாழ்க்கை சார். கிச்சா படத்தில் நடிக்கும் போது எனக்கு கால் முறிவு ஏற்பட்டது. அந்த வலியோடதான் கிச்சா படத்தில் நடித்தேன். அந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு போறேன். யாருமே இல்லை. தியேட்டர் மேனேஜர் என்னை பார்த்து வாழ்த்துகள் சார் சொன்னாரு. அப்ப நம்பலை ஒரு ரசிகர் நான் நடந்து வருவதை பார்த்ததும் என் பெயரை மறந்து நீ தான கிச்சா என சொல்லி கொண்டாடுனாங்க. அப்போ உச்சத்துக்கு போனது தான் இப்ப வரைக்கும் நடிகராக என் பயணம் தொடருது" என கிச்சா சுதீப் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory