» சினிமா » செய்திகள்

அருண் விஜய் நடித்துள்ள ரெட்ட தல படத்தின் டீசர் : சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 11:23:23 AM (IST)

அருண் விஜய் நடித்துள்ள ரெட்ட தல படத்தின் டீஸரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். 

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். கோவாவில் நிகழ்வது போன்ற ஆக்சன் காட்சிகள், அருண் விஜய்யின் இரட்டைத் தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory