» சினிமா » செய்திகள்

ரஜினியின் ‘தர்பார்’ தோல்வி ஏன்? - ஏ.ஆர்.முருகதாஸ் வெளிப்படை!

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 5:22:38 PM (IST)

ரஜினியின் ‘தர்பார்’ படம் தோல்விக்கான காரணம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தில் என்ன தவறு நடந்தது என்பதை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அப்பேட்டியில் ‘தர்பார்’ தோல்விக்கான காரணம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் "‘தர்பார்’ படத்தினை இன்னும் பிரம்மாண்டமாக, நுட்பமாக இயக்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அக்கதையில் நிறைய டிராவல் இருந்தது. அதெல்லாம் வேண்டாம் என்று சுருக்கி எடுத்தேன். ரஜினி சாரை வைத்து நிஜமான இடத்தில் படமாக்க வேண்டாம் எனவும் கருதினேன்.

அப்பா - மகள் கதையாகத்தான் அக்கதை இருந்தது. நயன்தாரா உள்ளே வந்தவுடன், அக்கதையின் போக்கு மாறியது. மும்பை பின்னணி, நடிகர்கள் உள்ளிட்டவற்றை மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. குறுகிய காலத்தில் ரொம்ப சந்தோஷத்தில் இயக்கிய படம் வேறு. அதன் கதையினை ரொம்ப சீக்கிரமே எழுதியது ஒரு காரணமாக இருக்கலாம்” என்று ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory