» சினிமா » செய்திகள்

விஜயகாந்த் பிறந்தநாள் : நடிகர் சங்கம் மரியாதை!

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:11:11 PM (IST)



விஜயகாந்தின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்திற்கு சங்க நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தேமுதிக முன்னாள் தலைவருமான விஜயகாந்த் 2023ம் ஆண்டு மறைந்த நிலையில் அவரது 73வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களாலும் தொண்டர்களாலும் கொண்டாப்படுகிறது. சினிமா மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர், நடிப்பைத் தாண்டி தன்னுடைய பண்பான குணத்தாலும் ஏராளமான நெஞ்சங்களை கவர்ந்தார்.

தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும், ஒரே நெகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைவுகூரப்படுகிறார் விஜயகாந்த். தமிழ் திரையுலகின் முன்னாள் முன்னணி ஹீரோவாகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், அரசியல்வாதியாகவும் தனக்கென ஒரு சிறப்பை பெற்றவர் இவர். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் போது, சங்க கடனை அடைத்த பெருமை இவருக்கு உண்டு.

விஜயகாந்தின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, சங்க நிர்வாகிகள் மற்றும் சில முக்கிய நடிகர்கள் மலர் செலுத்தி மரியாதை செலுத்தினர். இதில் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் உட்பட சில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

விஜயகாந்த் தனது திரைப்பட பயணத்தின் உச்சியில் இருந்த போதே, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சமூக நலனுக்காகவும், நடிகர்களுக்கான நலத்திட்டங்களுக்காகவும் பங்களித்தவர். அத்தகைய நடிகரின் பிறந்தநாளை இன்று திரையுலக பிரபலங்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது பிறந்தநாளில், அவரைப் பற்றிய நினைவுகளை அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், "அன்பு நண்பர் விஜயகாந்தின் பிறந்த நாள் இன்று. கடமை, நேசம், நேர்மை, போர்க்குணம் ஆகியவற்றின் உருவமாக இருந்த அவர் இன்றும் நினைவுகளின் வழியே நம்மோடு இருப்பதாகவே உணர்கிறேன். அவரது புகழ் ஓங்குக” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory