» சினிமா » செய்திகள்

ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா: நடிகர் விஷால்

வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:31:15 PM (IST)



சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிக்கு, நடிகர் சங்கம் சார்பாக பாராட்டு நடத்தப்படும் என்று  சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 35-வது படம் ஆகும். நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளை சென்னையில் இன்று ஆதரவற்றோர் மற்றும் முதியோருடன் கொண்டாடி இருக்கிறார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்ட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எப்போது திருமணம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பிற்பகல் நல்ல செய்தியை அறிவிக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் எனது திருமணம் நிச்சயம் நடக்கும்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிக்கு, நடிகர் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடத்தப்படுமா?' என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஒருவர் 50 வருடங்கள் திரையுலகில் நீடித்து, அதுவும் சூப்பர் ஸ்டாராகவே தொடர்வது என்பதை உலக சாதனையாகவே நான் பார்க்கிறேன்.தற்போது நடிகர் சங்க கட்டட வேலைகள் நடந்து வருவதால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதேநேரம் ரஜினி சாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற உணர்வும் உள்ளது. விழா தொடர்பாக பரிசீலித்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory