» சினிமா » செய்திகள்
எல்லோரும் நல்லா இருப்போம்: ரசிகர்களுக்கு ஜன நாயகன் படக்குழு புத்தாண்டு வாழ்த்து!
வியாழன் 1, ஜனவரி 2026 12:09:53 PM (IST)

ஜனநாயகன் படக்குழுவினர் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய்யின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் வருகின்ற ஜன. 9 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.முழுநேர அரசியலுக்கு வந்த பின் விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதியான திரைப்படம் ஜன நாயகன் என்பதாலும் இனி விஜய்யை திரையில் எப்போது பார்ப்போம் எனத் தெரியாததாலும் அவரின் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜன நாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் 90,000 -க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர்.இந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், புதிய போஸ்டரை ஜன நாயகன் படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில், "நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லோரும் நல்லா இருப்போம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஜன நாயகன் படத்தின் டிரைலர் நாளை (ஜன. 2) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பருத்திவீரன் புகழ் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
புதன் 31, டிசம்பர் 2025 12:44:55 PM (IST)

2025-ல் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் துரந்தர் முதலிடம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:38:09 AM (IST)

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் ஷாருக்கான்?
வியாழன் 25, டிசம்பர் 2025 5:01:21 PM (IST)

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது: மலேசிய அரசு நிபந்தனை?
செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:07:36 PM (IST)

ஜன நாயகனுடன் போட்டி உறுதி... புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்த பராசக்தி படக்குழு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:34:07 PM (IST)

