» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (திருநெல்வேலி)
தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதையற்ற சமுதாயத்தை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மறைமாவட்ட மதுவிலக்கு இயக்க போதைநோய் நலப்பணிக்குழு இயக்குநர் அருட்தந்தை பிரதீஸ், தருவைக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.கே.மணி, உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை பவுல் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி உதவித் தலைமையாசிரியர் பிரின்சஸ் ஷோபனா இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
சூசைநாதர் மதுவிலக்கு இயக்கத்தின் முன்னாள் இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் டி கிரேஸ், குறும்படங்கள் மற்றும் காணொளிகள் வழியாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
அப்போது, தற்போதைய சூழலில் பெருகி வரும் ஊடகப் போதை மதுப் போதை மற்றும் வாழ்வை அடிமைப்படுத்தும் பல்வேறு வகையான போதைப்பாவனைகளைத் தவிர்த்து, மாணவர்கள் அறநெறியோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமையாசிரியர் பிரின்சஸ் ஷோபனா, ஆங்கில முதுகலை ஆசிரியர் தங்கபாண்டி, கணினி ஆசிரியர் அந்தோனி ரோஸ்லின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்வில் பங்கேற்று உதவிய தருவைக்குளம் மதுவிலக்கு இயக்க உறுப்பினர்களுக்கும், பள்ளி நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்


கந்தன்Jul 1, 2026 - 08:26:04 AM | Posted IP 172.7*****