» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்: பிரதமர் மோடி

வெள்ளி 17, நவம்பர் 2023 3:37:20 PM (IST)

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இரண்டாவது உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, 'கடந்த ஜனவரியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் வளர்ந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தவகையில் தெற்கு உச்சி மாநாட்டின் குரல் உலகில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மேற்கு ஆசியாவில் நடைபெறும் சம்பவங்களில் இருந்து புதிய சவால்கள் உருவாகி வருகின்றன. உலகளாவிய நன்மைக்காக தெற்கு நாடுகள் ஒற்றுமையுடன் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். 

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தது. நாங்கள் இந்த விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்திருக்கிறோம். போர் குறித்த பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். 

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசிய பிறகு இந்தியாவில் இருந்து பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறோம். எனவே, உலகளாவிய நலனுக்காக தெற்கு நாடுகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இது' என்று பேசியுள்ளார். மேலும், செயற்கை நுண்ணறிவு காலத்தில் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

உள்ளூரில்Nov 18, 2023 - 03:01:54 PM | Posted IP 172.7*****

ஓணான் பிடிக்க தெரியாதவன் வைகுண்டம் ஏறி வால் நட்சத்திரம் பிடிச்சானாம்.. மணிப்பூர் நாறுது ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory