» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மின்சாரம் தாக்கி 4 குழந்தைகள் பலி: உத்திரப் பிரதேசத்தில் சோகம்

திங்கள் 20, நவம்பர் 2023 10:08:26 AM (IST)

உ.பி.யில் மின்விசிறி அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், பாரசக்வார் காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் சரோஜ் வீட்டில் மின்விசிறி அருகே நேற்று மாலை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது மின்சாரம் தாக்கியதில் நான்கு குழந்தைகள் பலியாகினர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பலியான குழந்தைகள் மயங்க், ஹிமான்ஷி, ஹிமாங்க் மற்றும் மான்சி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கியதே உயிரிழப்புக்கு காரணம் என வட்ட அலுவலர் குமார் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "ஃபராட்டா" மின்விசிறிக்கு அருகே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory