» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழக ஆளுநர் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? உச்சநீதிமன்றம் கேள்வி!
திங்கள் 20, நவம்பர் 2023 3:34:04 PM (IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ளது.

இந்த மனுவின் மீது கடந்த நவ.10-ஆம் தேதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "மக்களின் உரிமைகளை சிதைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் என்ற தமிழக அரசின் மனுவுக்கு ஆளுநரின் செயலாளர் பதிலளிக்குமாறு அறிவுறுத்தி வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.
"எந்த காரணமுமின்றி மசோதாக்களை ஆளுநர் நிராகரித்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வந்துகொண்டிருக்க முடியாது” என்று தமிழக அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, "உச்சநீதிமன்றம் நவ.10ஆம் தேதி ஆளுநர் தரப்பு பதிலளிக்க பிறப்பித்த பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு உள்ளது? 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்றும், ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய காத்திருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். மசோதாக்கள் மீது பரிசீலனைகள் செய்ய வேண்டியுள்ளதால் அவகாசம் தேவை என்று ஆளுநர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மம்தா, நிதிஷ் புறக்கணிப்பு: இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:53:05 PM (IST)

தெலங்கானாவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:41:24 PM (IST)

புயல், வெள்ள மீட்பு பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்: ராகுல் காந்தி
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:41:45 PM (IST)

மீண்டும் புத்துயிர் பெறுவோம்; மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுவோம்- கார்கே உறுதி!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 10:21:41 AM (IST)

பணமோசடி வழக்கு : சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு
திங்கள் 4, டிசம்பர் 2023 4:52:09 PM (IST)

மிக்ஜம் புயல் பாதிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் அமித் ஷா பேச்சு!
திங்கள் 4, டிசம்பர் 2023 4:36:30 PM (IST)
