» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகவும் குறைவு: பிரதமர் மோடி

வெள்ளி 1, டிசம்பர் 2023 5:15:17 PM (IST)

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகவும் குறைவு. என பிரதமர் மோடி தெரிவித்தார்.

துபாயில் நடைபெற்ற சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது; "இந்தியாவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் ஆகும். ஆனால் உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக மட்டுமே உள்ளது.

மக்கள்தொகை குறைவாக உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகவும் குறைவு. காலநிலை சார்ந்த இலக்குகளை அடைவதில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது." இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory