» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இனி 10,12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் சதவீதம் இல்லை: சிபிஎஸ் முடிவு

சனி 2, டிசம்பர் 2023 5:23:36 PM (IST)

10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வில் அவா்கள் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம் அல்லது ஒட்டுமொத்த தரவரிசை ஆகிய விவரங்களை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இனி வெளியிடாது’ என்று சிபிஎஸ்இ மூத்த அதிகாரி கூறினாா்.

மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சிபிஎஸ்இ ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை போன்ற விவரங்கள் வெளியீட்டையும் நிறுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது: 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். மாணவா் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் விவரம், ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்துப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பட்டியல் போன்ற விவரங்கள் வெளியிடப்படாது.

எனவே, உயா் கல்வி நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் சிபிஎஸ்இ மாணவா்களின் பாட மதிப்பெண்களின் அடிப்படையில், அவா்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணையும், மதிப்பெண் சதவீதத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்’ என்றாா். சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் 2024, பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory