» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மீண்டும் புத்துயிர் பெறுவோம்; மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுவோம்- கார்கே உறுதி!

செவ்வாய் 5, டிசம்பர் 2023 10:21:41 AM (IST)

"தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டெழுந்து, மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுவோம்" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து வெளியிட்ட பதிவில், "தெலங்கானா மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மூன்று மாநிலங்களிலும் எங்கள் கட்சியின் செயல்பாடு ஏமாற்றம்தான் அளிக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருந்தாலும், இந்த மூன்று மாநிலங்களிலும் மீண்டும் புத்துயிர் பெறுவோம். 

தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டெழுந்து, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இண்டியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தயாராகுவோம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டிச.6-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory