» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேற்கு வங்க பாஜக வேட்பாளர் பட்டியல் : நடிகர் பவன் சிங் திடீர் விலகல்!!
திங்கள் 4, மார்ச் 2024 11:09:06 AM (IST)
மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருந்த நடிகர் பவன் சிங் திடீரென லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. இதில், 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றன. இதில், மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் தொகுதியில் பிரபல போஜ்புரி நடிகர் பவன் சிங் (38) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, சமூக ஊடகங்களில் இவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். பவன் சிங் பாடிய பல திரைப்பட பாடல்கள், வங்காள பெண்களை கிண்டல் செய்தும், இழிவுபடுத்தியும் பாடுபடுவதுபோல இருப்பதாக விமர்சனம் செய்தனர். பவன் சிங்குக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
தவிர, மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலி தொகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திரிணமூல் கட்சியை பாஜக விமர்சித்து வரும் நிலையில், பவன் சிங்கை வேட்பாளராக நிறுத்துவதை பாஜக தலைமையும் விரும்பவில்லை. இதையடுத்து, போட்டியில் இருந்து விலகுமாறு பவன் சிங்கை பாஜக அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, எக்ஸ்தளத்தில் பவன் சிங் வெளியிட்டபதிவில், ‘என் மீது நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்த பாஜக தலைமைக்கு நன்றி. சில காரணங்களால், அசான்சோல் தொகுதியில் என்னால் போட்டியிட முடியாது’ என தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மக்களின் உறுதியான நிலைப்பாட்டால் அவர் விலகிவிட்டதாக திரிணமூல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறையினர் தொடர் பாலியல் வன்கொடுமை: கையில் எழுதி வைத்து மருத்துவர் தற்கொலை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 4:07:52 PM (IST)

பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:50:43 PM (IST)

ஆந்திராவில் பஸ் தீவிபத்தில் 20பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:39:54 AM (IST)

பீகார் சட்ட சபை தேர்தல்: இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:24:12 PM (IST)

திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

கொலை, ஆயுதக் கடத்தல் வழக்குகளில் தேடப்பட்ட 4 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!
வியாழன் 23, அக்டோபர் 2025 12:42:12 PM (IST)




