» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஓட்டுநர்கள் போனில் கிரிக்கெட் பார்த்ததே ரயில் விபத்துக்குக் காரணம்: அஸ்வினி வைஷ்ணவ்

திங்கள் 4, மார்ச் 2024 12:00:26 PM (IST)

செல்ஃபோனில் கிரிக்கெட் பார்த்ததே விசாகப்பட்டினம் ரயில விபத்துக்கு காரணம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில், ஓட்டுநர்களின் அலட்சியமே காரணம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் ரயில்வே பாதுகாப்பு முறைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "செல்ஃபோனில் கிரிக்கெட் பார்த்ததே விசாகப்பட்டினம் ரயில விபத்துக்கு காரணம். தற்போது, ரயில்களில், பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படுவதாகவும், ரயில் ஓட்டுநர்கள் கவனமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யும் கருவிகளும் பொருத்தப்படுவதாகவும் எதிர்காலத்தில், ரயில் பயணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு விபத்துகள் தவிர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory