» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வெள்ள நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிட வேண்டும்: தமிழக அரசு மனு தாக்கல்!
புதன் 3, ஏப்ரல் 2024 11:52:05 AM (IST)
வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக்கேட்டு பார்த்தோம். தரவில்லை. நாளை (இன்று) காலை சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு போடப்போகிறோம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே வெள்ள நிவாரணம் கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய அரசியலில் நீண்ட காலம் அரசுத் தலைவராகப் பதவி வகித்து பிரதமர் மோடி புதிய சாதனை!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:19:54 PM (IST)

பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கு: பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சனி 21, மார்ச் 2026 4:52:35 PM (IST)

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!
சனி 21, மார்ச் 2026 4:12:29 PM (IST)

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 12:30:14 PM (IST)

ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம்: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சனி 21, மார்ச் 2026 11:53:47 AM (IST)

கேரளத்தில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது!
வெள்ளி 20, மார்ச் 2026 4:13:29 PM (IST)

