» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகராஷ்டிராவில் பயங்கர தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!

புதன் 3, ஏப்ரல் 2024 12:08:33 PM (IST)மகராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக 7 பேர் உயிரிழந்தனர்

மகராஷ்டிராமாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரின் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள டானா பஜாரில் துணிக்கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக பரவியதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் புகையால் மூச்சுத்திணறி பலியாகினர். தீவிபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் தீயை வேகமாக அணைத்தனர். 

மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடந்த சம்பவம் குறித்து காவல் ஆணையர் மனோஜ் லோஹியா கூறுகையில்," சத்ரபதி சம்பாஜிநகர் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் தையல் கடை மற்றும் பிற வணிக நிறுவனங்களும், மேல் தளத்தில் ஒரு குடும்பத்தினரும் வசித்து வந்தனர். 

இந்நிலையில், இன்று அதிகாலை தையல் கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து 4.15 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட புகையால் 7 பேர் மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர்" என்றார்.

அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory