» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் விஜேந்தர் சிங்!
புதன் 3, ஏப்ரல் 2024 4:36:43 PM (IST)
பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், காங்கிரஸ் தலைவருமான விஜேந்தர் சிங் அக்கட்சியிலிருந்து விலகியதையடுத்து தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தெற்கு தில்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் விஜேந்திர சிங்.
நடிகரும் தற்போதைய எம்பியுமான ஹேமாலினி மீண்டும் போட்டியிடும் மதுராவில் கட்சியின் வேட்பாளராக விஜேந்தர் சிங் பெயர் கடந்த சில நாள்களாக பேசப்பட்டு வந்தது. ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அரசியல் செல்வாக்கைக் கொண்ட ஜாட் சமூகத்திலிருந்து வந்தவர் விஜேந்தர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.