» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்கள் விரும்பும் வரை மோடியே பிரதமராக இருப்பார் : ராஜ்நாத் சிங் சொல்கிறார்

வெள்ளி 12, ஏப்ரல் 2024 10:17:58 AM (IST)

மக்கள் விரும்பும் வரை மோடியே பிரதமராக இருப்பார். பிரதமர் மோடியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் எனவும், மக்கள் விரும்பும் வரை அவரே பிரதமராக இருப்பார் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாள்ர்களிடம் அவர் கூறியதாவது "சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது யார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உள்ளது. அவர் 3-வது முறையாக மட்டுமின்றி, 4-வது முறையும் பிரதமராக பதவியேற்பார். மக்கள் விரும்பும் வரை மோடியே பிரதமராக இருப்பார்.

மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெறும். அதேபோல் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் பா.ஜ.க. நல்ல வாக்கு சதவீதத்தைப் பெறும். தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பா.ஜ.க. உழைத்து வருகிறது." இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory