» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
போலி சான்றிதழ் விவகாரம்: ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கர் தேர்ச்சி ரத்து!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 11:06:55 AM (IST)
போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்து சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரியின் தேர்ச்சியை ரத்து செய்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் இறங்கிய நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கர் தனது சாதி, பார்வைதிறன் உள்ளிட்டவற்றில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் குடிமைப்பணியில் ஊனமுற்றோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அவர் தவறாக பயன்படுத்தியதாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தனது பதவியை தவறாக பயன்படுத்தியது மற்றும் போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக மராட்டிய அரசு அவரை ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரி பதவியில் இருந்து நீக்கம் செய்தது.
இதற்கிடையே போலி சான்றிதழ் சமர்பித்து பணியில் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்ட பூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நேற்று ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர் வருங்காலங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதவும் நிரந்தரமாக தடைவிதித்து உத்தரவிட்டது.
முன்னதாக இந்த புகார் குறித்து கடந்த 30-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டநிலையில், அவர் விளக்கத்தை சமர்ப்பிக்க தவறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)

நிமிஷா விவகாரத்தில் எல்லைக்கு மீறி எதுவும் செய்ய முடியவில்லை: மத்திய அரசு தகவல்
திங்கள் 14, ஜூலை 2025 4:46:38 PM (IST)

டெல்லியில் மாயமான பல்கலைக்கழக மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு!
திங்கள் 14, ஜூலை 2025 11:36:00 AM (IST)

நாம் அதிக சமத்துவத்தை நோக்கி முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:47:17 PM (IST)

இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டல் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது!
சனி 12, ஜூலை 2025 5:50:59 PM (IST)

ஏர் இந்தியா என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 12, ஜூலை 2025 10:17:14 AM (IST)
