» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண் மருத்துவர் கொலை: 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:17:46 PM (IST)

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை எதிரொலியாக 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் நிலையில், பயிற்சி மருத்துவர்கள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதோடு, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:50:16 PM (IST)

வெற்றிகரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா : பிரதமர் மோடி வாழ்த்து!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:35:58 PM (IST)

பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:22:02 PM (IST)

காமராஜரின் உயரிய சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 10:18:29 AM (IST)

கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)

நிமிஷா விவகாரத்தில் எல்லைக்கு மீறி எதுவும் செய்ய முடியவில்லை: மத்திய அரசு தகவல்
திங்கள் 14, ஜூலை 2025 4:46:38 PM (IST)
