» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவின் மகளான வினேஷ் போகத் வெற்றி : பஜ்ரங் புனியா வாழ்த்து!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:21:39 PM (IST)

அரியானா சட்டசபை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6015 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது. இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார்.
பாரீசில் இருந்து திரும்பிய சில தினங்களில் அவர் அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அரியானா சட்டசபை தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுத்தது. ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6015 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதன்மூலம் 19 ஆண்டுகளாக ஜூலானா தொகுதியில் தோல்வியை பார்த்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு வினேஷ் போகத் வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்திற்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "இந்தியாவின் மகளான வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். இந்தப் போட்டி ஒரு ஜூலானா தொகுதிக்காக மட்டும் அல்ல, கட்சிகளுக்கு இடையேயான சண்டை மட்டுமல்ல. இந்த போராட்டம் நாட்டின் பலமான அடக்குமுறை சக்திகளுக்கு எதிரானது. இதில் வினேஷ் வெற்றி பெற்றுள்ளார்" என்று பஜ்ரங் புனியா பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:50:16 PM (IST)

வெற்றிகரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா : பிரதமர் மோடி வாழ்த்து!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:35:58 PM (IST)

பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:22:02 PM (IST)

காமராஜரின் உயரிய சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 10:18:29 AM (IST)

கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)

நிமிஷா விவகாரத்தில் எல்லைக்கு மீறி எதுவும் செய்ய முடியவில்லை: மத்திய அரசு தகவல்
திங்கள் 14, ஜூலை 2025 4:46:38 PM (IST)
