» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குஜராத்தில் விமான உற்பத்தி ஆலை: மோடி - ஸ்பெயின் பிரதமர் திறந்து வைப்பு!
திங்கள் 28, அக்டோபர் 2024 12:28:12 PM (IST)

குஜராத்தில் விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி - ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் இணைந்து திறந்து வைத்தனர்!
குஜராத் மாநிலம் வதோதராவில் இந்திய ராணுவ விமானங்களை தயாரிக்கும் டாடா விமான உற்பத்தி ஆலை உள்ளது. இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த மைல்கல் ஆகும். இந்த ஆலைக்கு பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார்.
இந்தநிலையில், இன்று காலை வதோதராவுக்கு வருகை தந்த மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் வாகனப் பேரணியில் பங்கேற்றனர். இவர்களுக்கு வதோதரா மக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் கூடி நின்று உற்சாகமாக வரவேற்பு அளித்தனர் பின்னர், வதோதராவில் அமைந்துள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிட். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடா விமான ஆலையை இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்.
மொத்தம் 56 சி-295 விமானங்கள் வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் டிஏஎஸ்எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.
ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும். இந்த விமான தயாரிப்பு திட்டத்துக்கு டாடா நிறுவனம் மட்டுமல்லாது பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் சில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏர் இந்தியா என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 12, ஜூலை 2025 10:17:14 AM (IST)

தேர்தல் ஆணையம் பாஜக நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வெள்ளி 11, ஜூலை 2025 3:47:41 PM (IST)

75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!
வெள்ளி 11, ஜூலை 2025 12:44:15 PM (IST)

இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்!!
வெள்ளி 11, ஜூலை 2025 10:58:09 AM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 பேருக்கு தூக்குத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 11, ஜூலை 2025 8:23:20 AM (IST)

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வியாழன் 10, ஜூலை 2025 4:51:19 PM (IST)
