» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாட்ஸ் அப்புக்கு தடை விதிக்கக் கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

வெள்ளி 15, நவம்பர் 2024 8:42:07 AM (IST)

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்ற மறுப்பதால், ‘வாட்ஸ்அப்’புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரளாவை சேர்ந்த ஓமனகுட்டன் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர், உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: வாட்ஸ்அப் செயலி, புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் நிர்வாகம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப (டிஜிட்டல் ஊடக நெறிமுறை சட்டம்) விதிமுறைகளை பின்பற்ற மறுக்கிறது.

அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு குடிமக்களுக்கு அளிக்கும் அடிப்படை உரிமைகளை வாட்ஸ்அப் மீறி வருகிறது. தேச நலனுக்கும், தேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே, வாட்ஸ்அப் தனது தொழில்நுட்பத்தை மாற்ற விரும்பாவிட்டாலோ, மத்திய அரசுடன் ஒத்துழைக்காவிட்டாலோ அதை இந்தியாவில் செயல்பட அனுமதிக்கக்கூடாது.

தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதால், எத்தனையோ இணையதளங்களையும், செல்போன் செயலிகளையும் மத்திய அரசு தடை செய்துள்ளது. அதுபோல், வாட்ஸ்அப் இந்தியாவில் செயல்படவும், பயன்படுத்தவும் தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால், மனுவை விசாரணைக்கு ஏற்க விரும்பவில்லை என்று கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory