» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்: அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு!

புதன் 20, நவம்பர் 2024 10:59:16 AM (IST)

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. இதில், அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோர் வாக்களித்தனர்.

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கியது. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் பொதுமக்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் காலை 6.30 மணி முதலே வாக்குச் சாவடிகளில் குவியத் தொடங்கினர். வாக்குப் பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது.

மகாராஷ்டிர ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவரது மனைவி, மகராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், ராஜ்குமார் ராவ், கௌதமி கபூர் மும்பையில் வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory