» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு!

செவ்வாய் 21, ஜனவரி 2025 12:49:14 PM (IST)

கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராய்க்குக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கோல்கட்டாவில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜூனியர் டாக்டராக பணியாற்றி வந்த 31 வயது பெண், கடந்தாண்டு ஆக., 9ல் மருத்துவமனையின் கருத்தரங்க அரங்கில் பிணமாக கிடந்தார்.

கொலை நடந்த மறுதினம், சஞ்சய் ராய் என்ற இளைஞரை, போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின், குற்றவாளி சஞ்சய் ராய் மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் நேற்று (ஜன.,20) நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டாக்டர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆயுள் தண்டனை போதாது. தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், இன்று (ஜன.,21) குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழமை கோர்ட் தீர்ப்புக்கு எதிராகவும், தூக்கு தண்டனை விதிக்கக் கோரியும் மே.வங்க அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

'ஏற்கனவே, குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிப்பதே அனைவரது விருப்பம்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஆயுள் தண்டனை விதித்த கீழமை கோர்ட் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory