» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோ கோ உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன்: பிரதமர் வாழ்த்து!

திங்கள் 20, ஜனவரி 2025 12:56:51 PM (IST)



கோ கோ உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோ கோ உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணிகள் அணி மற்றும் பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. கோ கோ உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், கோ கோ உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"அசாத்திய திறமை, உறுதி மற்றும் குழுவாக செயல்பட்டு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் பழமையான பாரம்பரிய விளையாட்டை, இந்த வெற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. நாட்டில் உள்ள கணக்கிட முடியாத இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது உந்துதலாக இருக்கும்." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory