» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ககன்யான் திட்டம் வலுப்பெற சென்னை ஐ.ஐ.டி.யின் ஆய்வு பணி உதவும்: பிரதமர் மோடி உரை

ஞாயிறு 19, ஜனவரி 2025 8:37:49 PM (IST)

இந்தியாவின் ககன்யான் திட்டம் மற்றும் வருங்காலத்தில் விண்வெளி நிலையங்கள் அமைப்பது ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு சென்னை ஐ.ஐ.டி.யின் ஆய்வு பணி உதவும் என்று பிரதமர் மோடி பேசினார். 

பிரதமர் மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்று கிழமையில் வானொலி வழியே பொதுமக்களுடன் உரையாடும், மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று பேசினார். இது 118-வது மன் கி பாத் நிகழ்ச்சி ஆகும். இந்த ஆண்டின், முதல் மன் கி பாத் நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்ற இதில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

பிரதமர் மோடி பேசும்போது, சென்னை ஐ.ஐ.டி.யின் எக்ஸ்டெம் மையத்தின் பணிகளை பற்றி பாராட்டி பேசினார். அவர் பேசும்போது, விண்வெளியில் உற்பத்திக்காக, புதிய தொழில் நுட்பங்களை பற்றி சென்னை ஐ.ஐ.டி.யின் எக்ஸ்டெம் மையம் பணியாற்றி வருகிறது.

இந்த மையம், 3டி பதிக்கப்பட்ட கட்டிடங்கள், உலோக நுரைகள் மற்றும் ஆப்டிகல் பைபர்கள் போன்ற தொழில் நுட்பங்களை பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறது. நீரின்றி கான்கிரீட் உற்பத்தி செய்வது போன்ற புரட்சிகர வழிமுறைகளை மேற்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த ஆராய்ச்சியானது, இந்தியாவின் ககன்யான் திட்டம் மற்றும் வருங்காலத்தில் விண்வெளி நிலையங்கள் அமைப்பது ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு உதவும் என்று அவர் பேசியுள்ளார்.

நம்முடைய நாட்டில் கடந்த 2 மாதங்களில், 2 புதிய புலிகள் காப்பகங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று சத்தீஷ்காரில் உள்ள குரு காசிதாஸ் - தமோர் பிங்லா புலிகள் காப்பகம். 2-வது, மத்திய பிரதேசத்தில் ரதபானி புலிகள் காப்பகம் ஆகும் என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory