» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமலாக்கத்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதன் 22, ஜனவரி 2025 4:57:02 PM (IST)

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மீது பணமோசடி விசாரணையைத் தொடங்கியதற்காக அமலாக்க இயக்குனரகத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராகேஷ் ஜெயின் என்பவர் மீது குல் அச்ரா என்பவர் பண மோசடி மற்றும் ஒப்பந்த மீறல் தொடர்பாக அமலாக்கத் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விசாரணைக்கு எதிராக ராகேஷ் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி மிலிந்த் ஜாதவ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மக்களை துன்புறுத்துவதன் மூலம் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முடியாது என்றும் புலனாய்வு அமைப்புகள் சட்டத்தின் அளவுகோல்களுக்குள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அமலாக்க இயக்குனரகத்திற்கு ரூ.1 லட்சமும், ராகேஷ் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டதாகக் கூறி அவர் மீது புகார் அளித்த அச்ராவுக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory