» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சம்பல் நகரில் கலவரம் எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை, இணைய சேவை துண்டிப்பு

திங்கள் 25, நவம்பர் 2024 10:17:29 AM (IST)

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் கலவரம் எதிரொலியாக பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்​படு​வதற்கு முன்பாக அந்த இடத்​தில் இந்து கோயில் இருந்​த​தாக​வும், எனவே அந்த இடத்​தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து, அந்த மசூதி​யில் ஆய்வு நடத்த நீதி​மன்றம் உத்தர​விட்​டது. இதைத்​தொடர்ந்து, தொல்​லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்​கொள்​வதற்காக சம்பல் பகுதி​யில் உள்ள ஜமா மசூதிக்கு நேற்று காலை சென்றனர்.

அப்போது, அங்கு கூடி​யிருந்த மக்கள் மசூதி​யில் ஆய்வு நடத்து​வதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இருப்​பினும், நீதி​மன்ற உத்தர​வின் அடிப்​படை​யில் மசூதியை ஆய்வு செய்​வ​தில் அதிகாரிகள் உறுதியாக இருந்​தனர். இதையடுத்து, அந்த பகுதி​யில், போராட்​டக்​காரர்​களுக்​கும், பாது​காப்பு பணியில் ஈடுபட்​டிருந்த போலீ​ஸாருக்​கும் இடையே மோதல் வெடித்​தது.

இந்த வன்முறை சம்பவத்​தில் 3 பேர் உயிரிழந்​தனர். 30-க்​கும்மேற்​பட்ட போலீஸார் காயமடைந்​தனர். உயிரிழந்​தவர்கள் உள்ளூரை சேர்ந்த நயீம், பிலால், நவ்மன் என்று அடையாளம் காணப்​பட்​டுள்​ளது. ஜமா மசூதி அமைந்​துள்ள பகுதி​யில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு ஆஞ்​சநேய கு​மார் சிங் தெரி​வித்​தார். சர்ச்​சைக்​குரிய ஜமா மசூதி ஆய்வு ​விவ​காரம் தற்​போது சம்​பல் பகு​தி​யில் ப​தற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இச்சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கலவரம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தப்படும். கலவரத்தில் தொடர்புடையோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கிழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பல் பகுதியில் 24 மணி நேரத்துக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கற்கள், சோடா பாட்டில்கள் அல்லது வெடிக்கக் கூடிய பொருட்களை வாங்க, பதுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பல் பகுதிக்குள் வெளியாட்கள், சமூக அமைப்புகளைச் சார்ந்தோர், மக்கள் பிரதிநிதிகள் முன் அனுமதியின்றி வரக்கூடாது என தடை விதித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory