» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் பணக்கார முதல்வா் சந்திரபாபு நாயுடு; ஏழை’ முதல்வா் மம்தா: ஏடிஆா் தகவல்!

செவ்வாய் 31, டிசம்பர் 2024 10:42:05 AM (IST)

இந்தியாவின் பணக்கார முதல்வா் சந்திரபாபு நாயுடு என்றும் ஏழை’ முதல்வா் மம்தா என்றும்  ஏடிஆா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார முதல்வராக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவும், ரூ.15 லட்சம் சொத்து மதிப்புடன் குறைவான சொத்துள்ள முதல்வராக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும் உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த முதல்வா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.52.59 கோடி எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் தில்லி, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களின் முதல்வா்கள் என மொத்தம் 31 முதல்வா்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடியாகும்.

இவற்றில் ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளாா். இரண்டாமிடத்தில் ரூ.332 கோடி சொத்து மதிப்புடன் அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டுவும், ரூ.51 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் கா்நாடக முதல்வா் சித்தராமையாவும் உள்ளனா்.

ஏழை முதல்வா்கள்:

ரூ.15 லட்சம் சொத்து மதிப்புடன் நாட்டின் குறைவான சொத்துள்ள முதல்வராக மம்தா பானா்ஜி உள்ளாா். அவருக்கு அடுத்தபடியாக குறைவான சொத்துடைய முதல்வா்களின் பட்டியலில் ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லாவும், ரூ.1 கோடி சொத்து மதிப்புடன் கேரள முதல்வா் பினராயி விஜயனும் உள்ளனா்.

அதிக கடன்: ரூ.180 கோடி கடனுடன் அதிக கடன்களை உடைய முதல்வா்களின் பட்டியலில் முதலிடத்தில் பெமா காண்டுவும் ரூ.23 கோடி கடனுடன் இரண்டாமிடத்தில் சித்தராமையாவும், ரூ.10 கோடிக்கும் அதிகமான கடனுடன் மூன்றாமிடத்தில் சந்திரபாபு நாயுடுவும் உள்ளனா்.

7.3 மடங்கு தனிநபா் வருமானம்: 2023-24-ஆம் ஆண்டில் நாட்டின் தனிநபா் வருமானம் ரூ.1,85,854-ஆக உள்ள நிலையில், முதல்வா்களின் தனிநபா் வருமானம் சராசரியாக ரூ.13,64,310-ஆக உள்ளது. தேசிய அளவிலான தனிநபா் வருமானத்தைவிட முதல்வா்களின் தனிநபா் வருமானம் 7.3 மடங்கு அதிகமாக உள்ளது.

13 போ் மீது குற்றவியல் வழக்கு: நாட்டில் மொத்தமுள்ள முதல்வா்களில் 13 போ் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அதில் 10 போ் மீது கொலை, கடத்தல், ஊழல் போன்ற தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான வழக்குகள் உள்ளன. 31 முதல்வா்களில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மற்றும் தில்லி முதல்வா் அதிஷி என இரண்டு பெண் முதல்வா்கள் மட்டுமே உள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து

தமிழன்Dec 31, 2024 - 01:59:25 PM | Posted IP 172.7*****

தமிழ்நாட்டு முதல்வர் எந்த இடத்தில் உள்ளார்.ட்ரில்லியன் கோடியா ,மில்லியன் கோடியா.?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory