» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளை மூட இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு

புதன் 1, ஜனவரி 2025 10:31:47 AM (IST)

செயலற்ற,  பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படாத வங்கிக் கணக்குகளை மூட இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளை குறிவைத்து மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அந்த வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

அதன்படி, மினிமம் பேலன்ஸ் கூட வைக்காமல், நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் உள்ள கணக்குகளை மூன்று வகைகளாகப் பிரித்து அவற்றி மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் எந்தவொரு பணப் பரிவதர்த்னையும் செய்யப்படாத வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

மோசடி கும்பல்கள் இந்த வங்கிக் கணக்குகளை குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதால், அந்த வகை கணக்குகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, 12 மாதங்களுக்கு மேலாக பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையான வங்கி கணக்குகளையும் நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்தக் கணக்குகளை மீண்டும் பராமரிக்க விரும்புவோர் வங்கிக் கிளைகளை மீண்டும் நேரடியாக அணுகி பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல நாட்களாக இருப்புத் தொகை இல்லாமல் இருக்கும் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை நிறுத்தி வைக்கவும் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த மூன்று வகையாக கணக்குகளை தவறான செயல்களுக்குப் பயன்படுத்துவதை தடுப்பதற்காக இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு வருடமாக வங்கிக் கணக்கை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் உடனடியாக ஒரே ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்வதன் மூலம் இந்த நடவடிக்கை தடுத்து உங்கள் வங்கிக் கணக்கை மீண்டும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பின் வங்கிக் கிளையை நேரடியாக அணுகி உங்களுடைய அக்கவுண்டை புதுப்பித்துக் கொள்ளலாம். அதே சமயம், உங்கள் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் எனும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory