» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆங்கிலப் புத்தாண்டை முஸ்லிம்கள் கொண்டாடுவது ஷரீயத் சட்டபடி குற்றம்: உலாமா ஃபத்வா கருத்து!

செவ்வாய் 31, டிசம்பர் 2024 5:38:45 PM (IST)

ஆங்கிலப் புத்தாண்டை முஸ்லிம்கள் கொண்டாடுவது  ஷரீயத் சட்டப்படி குற்றம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா முப்தி ஷகாபுத்தீன் ரிஜ்வீ கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியின் உலாமாவாகவும் இருக்கும் இவர், ஷரீயத் சட்டத்தை ஆராய்ந்து ஃபத்வாக்களையும் வெளியிட்டு வருகிறார். 2025 ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தயாராகி வரும் வேளையில், இவரிடம் முஸ்லிம்கள் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடலாமா என விளக்கம் கேட்டுள்ளனர்.

இதற்கு ஷரீயத் முறைப்படி அவர் சட்டவிளக்கம் அளித்துள்ளார். ரிஜ்வீ தனது ஃபத்வாவில், "ஜனவரி 1-ல் வரும் புத்தாண்டு, பிரிட்டிஷ் மற்றும் கிறிஸ்தவர்களின் பண்டிகை நாள் ஆகும். இந்த நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் கலந்துகொள்ளக் கூடாது. இந்த புத்தாண்டை கொண்டாடுவது ஷரீயத் சட்டப்படி குற்றமாகும். இதை கொண்டாடுவோர் பாவம் செய்தவர் ஆவர்.

இந்த கொண்டாட்டம் அனைத்தும் கிறிஸ்தவர்களின் மதச்சடங்கு ஆகும். முஸ்லிம்கள் பிற மதங்களின் விழாக்களை கொண்டாடுவதும் அதில் பங்கு கொள்வதும் ஷரீயத்திற்கு எதிரானது. இதற்கு ஷரீயத்தில் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பாகின்றன. இதில், மது அருந்துதல், சூதாட்டங்கள், ஆண்-பெண் இணைந்து நடனமாடுவது உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன.

இவை அனைத்துக்கும் ஷரீயத்தில் சிறிதளவும் இடம் அளிக்கப்படவில்லை. ஆகவே, இதுபோன்ற நிகழ்வுகளில் முஸ்லிம்களில் ஆண், பெண் யார் பங்கு கொண்டாலும் அவர்கள் பெரும் பாவம் செய்தவர்களாக கருதப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மவுலானா ஷகாபுத்தீனுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தில் பிரபலமாவதற்காக இதுபோன்ற ஃபத்வாக்களை அளிப்பது சிலருக்கு வழக்கமாகி விட்டது என அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து

முல்லாDec 31, 2024 - 08:44:03 PM | Posted IP 162.1*****

இது காட்டுமிராண்டி மதம், இந்த மதவெறி பிடித்த நாயை பாலைவன நாட்டுக்கு ஒட்டகம் மேய்க்க அனுப்பி விடுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory