» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இரும்புக்கம்பி ஏற்றிச்சென்ற லாரி மீது டெம்போ மோதி விபத்து: 8 பேர் பரிதாப சாவு!

திங்கள் 13, ஜனவரி 2025 8:46:55 AM (IST)

நாசிக்கில் இரும்புக்கம்பி ஏற்றிச்சென்ற லாரி மீது டெம்போ மோதிய கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் வர்கா நகரில் நேற்று இரும்புக்கம்பி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல், நிப்ஹட் நகரில் இருந்து 16 பேருடன் சிட்கோ தொழிற்பேட்டைக்கு டெம்போ ஒன்றும் சென்றுகொண்டிருந்தது. வர்கா நகர் அருகே அய்யப்பன் கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்த டெம்போ எதிரே இரும்புக்கம்பி ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த கோர விபத்தில் டெம்போவில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory