» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அரசுப்பள்ளிகளில் மதிய உணவில் கடலை மிட்டாய் வழங்க தடை: கர்நாடக அரசு உத்தரவு
புதன் 19, பிப்ரவரி 2025 11:18:08 AM (IST)
கர்நாடகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மதிய உணவுடன் கடலைமிட்டாய் விநியோகிப்பதை நிறுத்துமாறும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் துணை ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது. கடலை மிட்டாயில் சர்க்கரை மற்றும் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே துணை ஊட்டச்சத்துக்காக வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒழுங்காக சேமிக்கப்படாத கடலை மிட்டாய், காலாவதி தேதியை தாண்டிய கடலை மிட்டாய் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக தார்வாட் கூடுதல் ஆணையர் கல்வித்துறையின் கவனத்திற்குக் கொண்டு வந்த மற்றொரு கடிதத்தையும் இந்த உத்தரவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மதிய உணவுடன் கடலைமிட்டாய் விநியோகிப்பதை நிறுத்துமாறும் அவர் துறைக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதை பரிசீலித்த கல்வித்துறை துணை ஊட்டச்சத்துக்காக முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கடலை மிட்டாய் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது தொடர்பாக தனி வழிகாட்டுதல்களை வெளியிட துறை ஆணையர்களுக்கு உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 12:49:44 PM (IST)

இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு: பாதுகாப்பு துறை அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 4:34:49 PM (IST)

அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு: கோடீஸ்வரர் ஆன கேரள தொழிலாளி!
வியாழன் 8, மே 2025 12:16:16 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய் செய்தி வெளியிட்ட சீன அரசு ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்!
வியாழன் 8, மே 2025 11:12:21 AM (IST)

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி: உமர் அப்துல்லா பேட்டி
புதன் 7, மே 2025 3:41:28 PM (IST)

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியீடு
புதன் 7, மே 2025 12:54:12 PM (IST)
