» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகா சிவராத்திரி: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!

புதன் 26, பிப்ரவரி 2025 12:00:21 PM (IST)

மகா சிவராத்திரி தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்றிரவு கொண்டாடப்படவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: "மகா சிவராத்திரி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் மகாதேவரின் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றும், நமது நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: "இந்த புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இந்த தெய்வீக நாள், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கட்டும். அதே போல் வளர்ந்த இந்தியாவின் உறுதியை வலுப்படுத்தட்டும். ஹரஹர மகாதேவ்” எனப் பதிவிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ”மகா சிவராத்திரி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிவசக்தியின் ஆசிகள் எப்போதும் உங்கள் மீது நிலைத்திருக்கட்டும். ஹரஹர மகாதேவ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory