» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அனைத்து பள்ளிகளிலும் தெலுங்குப் பாடம் கட்டாயம்: தெலங்கானா அரசு உத்தரவு!

புதன் 26, பிப்ரவரி 2025 12:07:02 PM (IST)

தெலங்கானாவில் வருகின்ற 2025 -26 கல்வியாண்டு முதல் அனைத்து விதமான பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயம் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிப் பிரச்னை தீவிரமடைந்துள்ள சூழலில், தெலுங்கு மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 2025 -26 கல்வியாண்டு முதல் தெலுங்கானா மாநிலத்தில் செயல்படு சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்பட அனைத்து பாடத்திட்டங்களில் இயங்கும் பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

1 முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தெலுங்கு கற்க வேண்டும் எனவும், வெளி மாநில மாணவர்கள் தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory