» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் ரத்து

வியாழன் 27, பிப்ரவரி 2025 4:57:58 PM (IST)

கல்வி நிதியை வழங்காததால் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் நாளை நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க இருந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கல்வி நிதியை வழங்காத மத்திய அரசுக்கும் அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தர்மேந்திர பிரதானின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory