» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மார்ச் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை: ரிசர்வ் வங்கி பட்டியல் வெளியீடு
வெள்ளி 28, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)
வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் 14 நாட்கள் விடுமுறை நாள்கள் வருகிறது.

சில மாநிலத்திற்கான பண்டிகை அல்லது விழா நாட்களில் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரம்ஜான், ஹோலி உள்ளிட்ட பண்டிகைகள் மார்ச் மாதத்தில் வருகிறது.
மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் வருமாறு:-
மார்ச் 2 (ஞாயிறு) - வார விடுமுறை
மார்ச் 7 (வெள்ளி) - சாப்சர் குட் (மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை)
மார்ச் 8 (2-வது சனிக்கிழமை) - வார விடுமுறை
மார்ச் 9 (ஞாயிறு) - வார விடுமுறை
மார்ச் 13 (வியாழன்) -ஹோலிகா தஹான். ஆட்டுக்கல் பொங்கல் பண்டிகை - உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், கேரளாவில் விடுமுறை
மார்ச் 14 (வெள்ளி) - ஹோலி - திரிபுரா, ஒடிசா, கர்நாடகா, தமிழகம், மணிப்பூர், கேரளா மற்றும் நாகாலாந்து மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களில் பொது விடுமுறை
மார்ச் 15 (சனிக்கிழமை) - ஹோலி - அகர்தலா, புவனேஸ்வர், இம்பால் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் விடுமுறை
மார்ச் 16 (ஞாயிறு) வார விடுமுறை
மார்ச் 22 (4-வது சனிக்கிழமை) - வார விடுமுறை மற்றும் பீகார் திவாஸ்
மார்ச் 23 (ஞாயிறு) - வார விடுமுறை
மார்ச் 27 (வியாழன்) - ஷகாப் இ கதர் -ஜம்மு உள்ளூர் விடுமுறை
மார்ச் 28 (வெள்ளி) - ஜூமத் உள் விதா -ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் விடுமுறை
மார்ச் 30 (ஞாயிறு) - வார விடுமுறை
மார்ச் 31 (திங்கள்) - ரம்ஜான் விடுமுறை (மிசோரம், இமாச்சல் தவிர)
வங்கிகளுக்கு நேரடியாக சென்று அத்தியாவசிய வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டுவது அவசியம். மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ. சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:37:00 AM (IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:22:22 AM (IST)

வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் : கிரண் ரிஜிஜு
புதன் 2, ஏப்ரல் 2025 3:28:20 PM (IST)

மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை: காங்கிரஸ்
புதன் 2, ஏப்ரல் 2025 12:09:49 PM (IST)

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:40:05 PM (IST)

இலங்கையிடம் படகுகளை இழந்த மீனவர்களுக்கு என்ன நிவாரணம்?.. கனிமொழி எம்.பி. கேள்வி
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:14:12 PM (IST)
